இந்நிலையில் இந்த போட்டிகளை ஒளிபரப்ப எந்த முன்னணி தொலைக்காட்சி சேனல்களும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஜிம்பாப்வேக்கு எதிராக நட்சத்திர வீரர்கள் இல்லாத அணி விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என சொல்லப்படுகிறது. இதனால் போட்டிகளை தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரும் இதுபோல தூர்தர்ஷனில்தான் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.