இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: திட்டமிட்டபடி நடைபெறுமா?

வியாழன், 14 மே 2015 (10:29 IST)
வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நேரடி கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இருஅணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதில் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 2 டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும். எனினும் இத்தொடருக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளதால், இப்போட்டிகள் திட்டமிட்டபடி அரங்கேறுமா என சந்தேகம் எழுந்தது. 
 
இந்நிலையில் போட்டிகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகர்யார்கான், ஜக்மோகன் டால்மியா, செயலாளர் அனுராக் தாகூர்,  அருண் ஜெட்லி ஆகியோர் ஆலோசனை  நடத்தினார்கள். இறுதியில் இரு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்