தற்போது ஐசிசி டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டையலை வெளியிட்டுள்ளது. டி-20 போட்டியில் முதலிடத்தை இலங்கை அணி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும், நான்காவது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஐந்தாவது இடத்தை பாகிஸ்தான் அணியும் பிடித்துள்ளன.
அதுபோல, ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியா அணி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை நியூசிலாந்தும், நான்காவது இடத்தை தென் ஆப்பிரிக்கா அணியும், ஐந்தாவது இடத்தை இலங்கை அணியும் பிடித்துள்ளன.