மேலும் இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளதாவது, இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது. லண்டனில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் அங்கு போட்டி நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதிலும் சிக்கல் இருந்ததால் போட்டி எங்கு நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே பிரிட்டன் அரசுடனான் பேச்சுவார்த்தைக்கு பின் திட்டமிட்டபடி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி போட்டி பாதுகாப்பு வளையத்தில் சவுதாம்டன் நகரில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.