T20 தர வரிசையில் இந்தியா முதலிடம்! இலங்கையை பின்னுக்குத் தள்ளியது!

புதன், 2 ஏப்ரல் 2014 (15:27 IST)
நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை தோல்வி அடையாது அரையிறுதிக்கு முன்னேறிய தோனி தலைமை இந்திய அணி T20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது.
130 தரவரிசைப் புள்ளிகளுடன் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலயில் இருந்தாலும் தோல்வியடையாமல் இதுவரை சென்றதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
நடப்பு T20 உலக சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் அணி 5வது இடத்திற்கு ஆஸ்ட்ரேலியாவை பின்னுக்குத் தள்ளி சென்றுள்ளது.

நடப்பு உலகக் கோப்பையை வெல்லும் அணி 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசு தொகையாக பெறும். ரன்னர் அணி 550,000 டாலர்களை பரிசுத் தொகையாகப் பெறும்.
தனிப்பட்ட வீரர்கள் தர நிலையில் பேட்டிங்கில் விராட் கோலி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
 
வெஸ்ட் இண்டீஸ் லெக் ஸ்பின்னர் சாமுயேல் பத்ரி, சுனில் நரைனை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கிறார்.
 
இங்கிலாந்துக்கு ஒரே ஆறுதல் அலெக்ஸ் ஹேல்ஸ் பேட்டிங் தரவரிசையில் 2 ஆம் இடம் வகிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்