நேற்று நான்காவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் சேர்த்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றி சர்வதேச டி 20 போட்டிகளில் இந்திய அணிக்கு 136 ஆவது வெற்றியாகும். இதுவரை 212 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 136 வெற்றிகள் பெற்றதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி 226 டி 20 போட்டிகளில் விளையாடி 135 வெற்றிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.