இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

சனி, 13 பிப்ரவரி 2016 (06:00 IST)
இலங்கைக்கு எதிரான 2 ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

 
இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, இந்தியாவை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது.
 
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2 ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சன்டிமால் முதலில் இந்தியாவை பேட் செய்ய கேட்டுக் கொண்டார்.
 
இதையடுத்து, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் கூட்டணி தொடங்கியது. இருவரும் சிரமமின்றி இலங்கை பந்து வீச்சை நலாபுறமும் அடித்து வீசினர். இதில், தவான் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். ரோகித் சர்மா 43 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த நில நமிடங்களில் ரஹானேவும் பெவிலியன் திரும்பினார். மற்றவர்கள் எல்லாம் எதிர்பார்ப்பை நிறைவற்றாமலே ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்தனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து.
 
அடுத்து, இலங்கை அணி ஆடியது. முதல் ஓவரை அஸ்வின் வீ, அதில், இலங்கை தொடக்க ஆட்டக்காரர் தில்ஷன் சிக்கிக் கொண்டார். அடுத்துஅடுத்து வந்த அனைவருமே சொதப்பியதால் இலங்கை அணி திணறியது.
 
மேலும், 20 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து, 127 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்