இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள வானொலி நிலையம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவில்லை, எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறவில்லை. இது உறுதி” என்று கூறியுள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகும் வண்ணம், தனது உடற்தகுதியை தற்காத்துக் கொள்வதாகவும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.