சமவாய்ப்புகள் இருந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது - மெக்கல்லம்

சனி, 28 மார்ச் 2015 (18:52 IST)
உலகக் கோப்பையை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் சம வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 
 
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கிய 11–வது உலகக் கோப்பைப் போட்டிகள் ஞாயிற்றுக் கிழமையுடன் [29-03-15] நிறைவடைகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும்  மோதவுள்ளன.
 

 
இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ள மெக்கல்லம், “இது எங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய தருணம். எங்களுக்கு இது ஆச்சரியமான சுற்றுப்பயணமாக இருந்தது. உலகக் கோப்பையை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் சம வாய்ப்புகள் உள்ளன.
 
மெல்போர்ன் மைதானம் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய மைதானமாகும். அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி மைதானத்தைப் பார்த்தால் அது பெரிய மைதானமாக இருக்கும். ஆனால், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைப் போல பெரிய மைதானமாக இருக்காது. 
 
நாளைய போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஆஸ்திரேலிய அணி எங்களை வெற்றி பெற முடியாது என்று கூற முடியாது. ஆனால், நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்று நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்