கெயில், பெண் ஊழியர் விவகாரம்: மானநஷ்ட வழக்கு தொடுக்கும் கெயில்

வியாழன், 7 ஜனவரி 2016 (15:27 IST)
கெயில் சென்ற வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது பெண் ஊழியரிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டதாக செய்தி வெளியிட்ட ஃபேர்ஃபேக்ஸ் என்ற ஊடக நிறுவனத்தின் மீது கெயில் மானநஷ்ட வழக்கு தொடரவிருக்கிறார்.


 
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியின் போது தொலைக்காட்சி பெண் நிருபருக்கு பேட்டியளித்தார் கெயில். இந்த பேட்டியின் போது பெண் நிருபரை பார்த்து உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார், மேலும் ``நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்'' என்றார்.
 
பெண் நிருபரிடம் கெயிலின் இந்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி விஸ்வரூபம் எடுத்தது. இதனையடுத்து அவர் விளையாடும் மெல்போர்ன் அணி இன்று அவருக்கு 10000 டாலர்கள் அபராதமாக வித்தது.
 
இந்நிலையில் கிரிஸ் கெயில் மீது மேலும் பெண் ஊழியர் ஒருவரிடம் அரைநிர்வாணமாக நின்றதாக சர்ச்சை எழுந்தது. சென்ற வருடம் உலககோப்பை போட்டி நடந்த போது, இடுப்புக்கு கீழே துண்டால் மறைத்திருந்த கெயில் சாண்ட்விச் சாப்பிடவந்த பெண் ஊழியரை பார்த்ததும், இதற்காகத்தானே வந்தீர்கள் என்று, துண்டை கீழே போட்டு ஆணுறுப்பை ஓரளவு காண்பித்தபடி நின்றுள்ளார் என ஆஸ்திரேலிய ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது இந்த செய்தி.
 
பெண் ஊழியரின் இந்த பேட்டியை ஃபேர்ஃபோக்ஸ் என்ற ஊடகம் பரப்பியது. ஆனால் இந்த செய்தியை கெயில் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் மீது கெயில் மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக கெயிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
 
ஃபேர்ஃபோக்ஸ் நிறுவனத்தின் தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிக்கை கெயில் மறுப்பு தெரிவித்த பின்பும் பெண் ஊழியரின் பேட்டியை உலகம் முழுவதுமாக பரப்பியதாக கெயிலின் மேலாளர் குற்றம்ச்சாட்டியுள்ளார். அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை மேற்கொள்ள ஆஸ்திரேலியாவின் பிரபல வழக்கறிஞர் மார்க் ஓ பிரெய்னை நியமித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்