உலக சாதனையை சமன் செய்த கிறிஸ் கெய்ல்

சனி, 10 ஜனவரி 2015 (17:33 IST)
20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
 
நேற்று கேப்டவுனில் தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி-20 போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூஸோ 51 (68) ரன்களும், டூ பிளஸ்ஸிஸ் 38 (25) ரன்களும் எடுத்தனர். 
 
பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 


கிறிஸ் கெய்ல்..
 
இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 17 பந்தில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்த 2 ஆவது வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். அவர் 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகளும், 8 சிக்ஸரும் அடங்கும்.
 
இதற்கு முன்னர் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) மைபர்க் (நெதர்லாந்து) ஆகியோரும் 17 பந்தில் 50 ரன் எடுத்து இருந்தனர். இந்திய வீரர் யுவராஜ்சிங் 12 பந்தில் அரை சதம் அடித்ததே சாதனையாக உள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த கெய்ல், “நான் எனது அனிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்துள்ளேன். இதற்காக உண்மையிலே நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
 


டூ பிளஸ்ஸிஸ்..
 
டூ பிளஸ்ஸிஸ் கூறும்போது, “ஒரு அணித்தலைவராக இதை ஒரு தீய கனவாக கருத வேண்டும் என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன். அவர் அடித்து ஆடிய போது பந்து எல்லா திசைகளிலும் பறந்தது” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்