இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றாலும், ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்திய அணி, இந்த ஆண்டு அஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணி அஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்படும். கோஹ்லியின் பேட்டிங் திறன் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு மண்ணில், அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.
வேகத்தில் மிரட்டும் பும்ரா, புவனேஷ்வர் குமார் இருவரும் வெளிநாட்டு மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற பெரும் பங்கு வகிப்பார்கள். கோலி பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், டி20 தொடரையும் வென்றது என கூறியுள்ளார்.