அப்போது பதற்றமான அந்த சூழலில் மிகச்சிறப்பான இன்னிங்ஸை கட்டமைத்தனர் கம்பீரும், கோலியும். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். கம்பீர் சிறப்பாக விளையாடி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் தவறவிட்டார்.
இந்த போட்டி குறித்து தற்போது பேசியுள்ள கம்பீர் “நான் 97 ரன்களில் இருந்த போது இன்னும் ஒரே ஷாட்டில் சதமடிக்கப் போகிறேன். அதை எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவுட் ஆனபோது எனக்கு சென்ச்சுரியை விட எதிரணிக்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்து விட்டோமே என்ற வருத்தம்தான் இருந்தது” எனக் கூறியுள்ளார்.