ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை: ஓரே வீரர் 34 பவுண்டரிகள், 27 சிக்ஸர்கள், 350 ரன்கள் விளாசல்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (17:08 IST)
ஒருநாள் முதல் தர கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 34 பவுண்டரிகள், 27 சிக்ஸர்கள் உட்பட 350 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
 
21 வயதான இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் எனும் வீரர் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் நாண்ட்விச் நகரில் நடந்த ஆட்டத்தில், நாண்ட்விச் அணியும் கேல்டி அணியும் மோதின.
 

 
இதில் முதலில் பேட்டிங் செய்த நாண்ட்விச் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 579 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் நாண்ட்விச் அணியின் வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 138 பந்துகளில் 34 பவுண்டரிகள், 27 சிக்சர்கள் உட்பட 350 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் லிவிங்ஸோட்ன் 123 பந்துகளில் முச்சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
 

 
இதற்கு முன்னதாக ஒருநாள் முதல் தர கிரிக்கெட் போட்டியில் கடந்த 2008ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், 15 வயதான நிகிலேஷ் சுரேந்திரன் ஆட்டமிழக்காமல் குவித்த 334 ரன்கள்தான் உலக சாதனையாக இருந்தது.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

பின்னர் ஆடிய கேல்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நான்ட்விச் அணி 500 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லிவிங்ஸ்டோன், “நான் பெரும்பாலும் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட முயற்சித்தேன். அதிர்ஷ்டவசமாக அவ்வாறு ஆட்டத்தின் மத்தியில் சில நடந்தேறின” என்றார்.
 
மேலும், “இவை எல்லாம் ஒரு கனவுபோல் தோன்றுகிறது. இன்னும் அதற்குள் மூழ்கிவிடவில்லை. ஆனால் எனக்கு இது மிகப்பெரிய பெருமைப்படக்கூடிய நாளாக அமைந்தது. அதிர்ஷ்டவசமாக எனது தந்தையும், தாயும் இந்த ஆட்டத்தை இதை பார்த்துக்கொண்டு இருந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்