''எல்லா பக்கமும் பிளாக்'' ...''அப்பா உன்னை மிஸ் செய்கிறேன்''- மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தவான்

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:13 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தன் மகன் பிறந்த நாளையொட்டி உருக்கமாக தன் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஷிகர் தவான். இவர். கடந்த 2013 ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டடியில் அறிமுகமானார். 167 ஒரு நாள் போட்டிகளிலும், 6793 ரன்களும்,34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும், 217 ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு 6616 ரன்களும் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக  பொறுப்பு வகித்து வருகிறார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இத்தம்பதியர்க்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர் ஜோராவர். தற்போது ஆயிஷா முகர்ஜியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷிகர் தவான், தன் மகன் பிறந்த நாளையொட்டி உருக்கமாக தன் வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,'' உன்னை நேரில் பார்த்து ஓராண்டு ஆகிவிட்டது.  உன்னைத் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு எல்லா பக்கமும், பிளாக் செய்யப்பட்டுள்ளேன். அதனால் இங்கே பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன். மகனே …அப்பா உன்னை மிஸ் செய்கிறேன்''…என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்