சிதறிய ஸ்டம்புகள்… ஆனாலும் தோனிக்கு அடிச்ச லக்!

திங்கள், 15 மே 2023 (07:32 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்த போட்டியை தோனிக்காகவே பல ரசிகர்கள் காண மைதானத்து வந்திருந்தனர். ஆனால் அவர் கடைசி ஓவரின் கடைசி 2 பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் முதல் பந்து யார்க்கராக வர அதை மிஸ் செய்தார். ஆனால் அந்த பந்து நோ பால் என்பதால், ப்ரிஹிட் வழங்கப்பட்டது.  அந்த பந்தில் தோனி பவுல்ட் ஆக, ஸ்டம்புகள் பறந்தன. ஆனால் ப்ரீஹிட் என்பதால் அவர் அவுட் இல்லை. கடைசி பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார். தோனியிடம் இருந்து பெரிய அளவில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்