இந்திய பேட்ஸ்மேன்கள் சரியில்லை: தோனி சாடல்

புதன், 16 மார்ச் 2016 (12:02 IST)
20 ஓவர் உலகக் கோப்பை சூப்பர்-10 சுற்று நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா சொந்த மண்ணில் படுதோல்வியடைந்து மண்ணை கவ்வியது.


 
 
இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி 126 ரன்னில் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தியது. ஆனால் இதனை பலம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்திய அணி 79 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.
 
இந்திய தரப்பில், தோனி 30 ரன்னும், கோலி 23 ரன்னும், அஸ்வின் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னிலே வெளியேறினர். இந்திய அணியின் மோசமான இந்த தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி பேட்ஸ்மேன்களை குறை கூறினார்.
 
இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர், அவர்கள் மோசமான ஷாட்களை அடுத்து வெளியேறினர். மிடில் ஓவர்களில் எந்த ஒரு இணையும் நிலைத்து நின்று ஆடவில்லை. மேலும் நியூசிலாந்து வீரர்கள் இந்த ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினர். இந்திய பேட்ஸ்மேன்கள் தான் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர். 127 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக எடுக்க கூடிய இலக்கு தான் என்றார் இந்திய அணியின் கேப்டன் தோனி.

வெப்துனியாவைப் படிக்கவும்