முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிவிலியர்ஸ், டுபிளேசி சதம்

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (14:35 IST)
ஜிம்பாவே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கு பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா எடுத்த 327 ரன் இலக்கை தென் ஆப்பிரிக்கா அபாரமாக கடந்து வெற்றி பெற்றது.

ஜிம்பாவேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி டுபிளேசியின் ரன் மழையில் நனைந்தது. டுபிளேசி 98 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 106 ரன்களை விளாசி தள்ளினார்.

பின்னர் கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் 136 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 106 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிச்கர்களும் அடங்கும்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்குத் தென்ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.  இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 46.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 328 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்