அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை சென்னை சூப்பஸ் கிங்ஸ் அணியும்- மும்பை அணியும் மோதவுள்ள நிலையில் இன்று சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் முகமூடி அணிய வேண்டுமெனவும் பொதுசுகாதார பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ளார்.