இளம்வீரரை முறைத்துப் பார்த்த கோலி... குவியும் விமர்சனம்...
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:58 IST)
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. ஆனால் இப்போட்டியைத் தாண்டிய ஒரு சம்பவம் நெட்டிசன்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் கோலியை அதிகம் பேர் விமர்சிக்கின்றனர்.
கோலி எப்பவும் மைதானத்தில் ஆக்ரோஷமாக இருப்பவர் என்றாலும் நேற்றைய ஆட்டத்தின் போது வெற்றிக்கி வழிவகுத்த இளம் வீரர் சூரிய குமார் யாதவை அவர் முறைத்தபடி வர சூரியகுமாரும் அசைந்து கொடுக்காமல் அப்படியே நின்றார்.
இதனால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது கோலியின் தவறு எனப் பலரும் குரல் எழுப்பிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம் , விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியுடன் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.