அதேசமயம் லக்னோ அணிக்கு ரன் கொடுக்காமல் க்ரிஸ் ஜோர்டானும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார், கடந்த போட்டிகளில் அதிகமான ரன்களை அவர் கொடுத்ததால் அவரது ஓவர்கள் பதற்றத்திலேயே இருந்தது. 4வது ஓவரில் வந்தவர் 7 ரன்களை கொடுத்து கைல் மையர்ஸை தூக்கினார். அதன்பின்னர் ரோகித் அவருக்கு விக்கெட் கொடுக்கவே இல்லை.
அதன்பின்னர் 16 ஓவர் வரை மத்வால் விக்கெட் வேட்டை ஆடிய பின் லக்னோ அணியின் கடைசி வீரரான மொஷின் கான் தான் உள்ளே இருந்தார். அதனால் 16வது ஓவரை க்ரிஸ் ஜோர்டானுக்கு ரோஹித் கொடுத்தார். அதை பயன்படுத்திக் கொண்டி பேட்டிங் ப்ராக்டிஸ் இல்லாத மொஷின் கானுக்கு டாட் பந்துகளாக வீசி ஒரு ஓவர் முழுவதுமே ரன் கொடுக்காமல் ஒரு மெய்டன் ஓவரை செய்து க்ரிஸ் ஜோர்டான் சாதனை படைத்துக் கொண்டார்.