வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சம்பள பிரச்சனையால் சர்ச்சை

புதன், 8 அக்டோபர் 2014 (13:25 IST)
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், இதில் முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் நடக்கிறது.
 
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சம்பள பிரச்சனைக் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும் பத்திரிகையாளர் சந்திப்பையும் புறக்கணித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கத்துக்கும்,  கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
இதில் புதிய ஒப்பந்தப்படி வழங்கப்படும் சம்பளத்தை ஏற்றுக்கொள்ள பிராவோ உள்பட சில வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் பயிற்சியை புறக்கணித்தனர். மேலும் அக், 8 இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியையும் அவர்கள் புறக்கணிப்போவதாக கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த 2009 ஆம் ஆண்டும் சம்பள பிரச்சனையால் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச தொடரை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்