டீகாக்கை வீழ்த்தினார் புவனேஷ்!

வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (18:40 IST)
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரயிறுதியில் முதலில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா முதல் ஒவரிலேயே புவனேஷ் குமாரிடம் குவின்டன் டீகாக் விக்கெட்டை பறிகொடுத்தது.
 
ஆனாலும் அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. 4வது பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்றது டிகாக் மிகப்பெரிய டிரைவ் ஆட முயன்றார். பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது.
 
பரவலான முறையீட்டிற்கு நடுவர் செவி சாய்த்தார். டீகாக் அவுட். தற்போது டுபிளேசி, ஆம்லா விளையாடுகின்றனர்.
 
இந்திய அணியில் மாற்றமில்லை. தவான் சேர்க்கப்படவில்லை, ஷமிக்கு பதிலாக மோகித் சர்மா. ஆகவே மாற்றமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்