நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், வரும் 22ஆம் தேதி நான்காவது ஒருநாள் போட்டியும், 25ஆம் தேதி ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
அதேபோல், தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாடவிருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஜடேஜா மீண்டும் இடம் பெற்றார்.
விராட் கோலி [கேப்டன்], முரளி விஜய், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்கே ரஹானே, ரவீந்திர ஜடோஜா, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஸ்குமார், லோகேஷ் ராகுல், மொஹிந்த் சர்மா, அஸ்வின்.