பெங்களூரு டெஸ்ட்: தாமதமாகும் 4-ம் நாள் ஆட்டம்

செவ்வாய், 17 நவம்பர் 2015 (13:26 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாம்தமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஏற்கனவே மழையால் 2 மற்றும் 3 ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஆடுகளம் தகுதியாக இல்லாததால் 4 ஆம் நாளான இன்றைய ஆட்டம் மதியம் 2 மணிக்கு மேல் தாமதமாக தொடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி வீசப்பட்ட 59 ஓவர்களில் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 22 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 28, ஷிகர் தவன் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
 
இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டம் தாமதமாவதாலும் மழை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்