கோலியை நாயுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலியா

ஞாயிறு, 12 மார்ச் 2017 (12:42 IST)
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியா ஊடகம் விலங்குடன் ஒப்பிட்டுள்ளது.  


 

 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அதிரடி சூழலில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்டின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மைதானத்தில் இருந்த அனைவரையும் முட்டாளாக முயற்சித்தார். 
 
இதை இந்திய கேப்டன் கோலி, கடுமையாக கண்டித்தார். ஆஸ்திரேலியா ஊடகம் தற்போது கோலியை கேலி இதற்காக செய்துள்ளது. கோலியை நாய்குட்டி, பாண்டா போன்ற விலங்குகளுடன் ஒப்பிட்டு கேலி செய்துள்ளது.
 
இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்