அந்த அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். 32 ரன்களில் 50 ரன்களை கடந்தார் அவர். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாகவே ஆடினார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில் ஹாசில்வுட் ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.