பின்னர் தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தி 216 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 47 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.