ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் உயிரிழந்தார்

வியாழன், 27 நவம்பர் 2014 (10:40 IST)
பந்து பவுன்ஸ் ஆகியதன் விளைவால் ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவர் சிகிக்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலிய ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் நவ, 25 அன்று நடைபெற்றது. இதில் முன்னணி வீரரான ஹியூக்ஸ்கு, பந்து பவுன்ஸ் ஆனதில் தலை படுகாயம் அடைந்தது. இதனால் அவர் விளையாட்டு மைதானத்தில் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். உடனே ஹியூக்ஸ் ஹெலிகாப்டர் மூலம் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. 
 
இந்நிலையில் இன்று நவ, 27 ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வரும் 30 ஆம் தேதி தனது 26 ஆவது பிறந்த நாளை கொண்டாடயிருந்த நிலையில் ஹியூக்ஸ் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கினார், ஹியூக்ஸ். மேலும் 26 டெஸ்ட், 25 ஒரு நாள் போட்டி, ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்