இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் 8 டெஸ்ட் போட்டியில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2வது இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் உள்ளார். இவர் 13 டெஸ்டில் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.