இந்நிலையில் தற்போது அவர் சர்வதேச டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நேற்று இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் சஹாலை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சஹால் 96 விக்கெட்களோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அர்ஷ்தீப் சிங் 2022 ஆம் ஆண்டுதான் முதல் முதலாக டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது வியக்கத்தக்கது. அவர் இதுவரை 61 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.