திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்களும, பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் டெல்லியே விழா கோலமுடன் காணப்படுகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இத்திருமண விழாவில் பங்கேற்க கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து வருகை தர திட்டமிட்டுள்ளார். கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் சேர்த்து என்ன விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றை துளிக்கூட கண்டுகொள்ளாமல் இந்த இளம் ஜோடி வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.