உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை அறிவிப்பு

வியாழன், 15 ஜனவரி 2015 (14:05 IST)
இந்திய அணியின் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான சீருடைகளை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப் பூர்வ ஆடை வடிவமைப்பாளர்கள் நைக் வெளியிட்டுள்ளனர்.
 

 
ஆஸ்திரேலியாவில் தொடங்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான சீருடை வெளியிடப்பட்டது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த உடையை இந்திய அணியினர் அணிந்து விளையாடுவார்கள்.
 
இந்திய அணியின் இந்த புதிய சீருடை லேசானது, மிகவும் வசதியாக உள்ளது.மற்றும் இந்த சீருடை மைதானத்தில்  வீரர்களின் கவன சிதறல்களை குறைக்க உதவும் என இந்திய அணியின்  கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்