2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி அறிவிப்பு

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (16:54 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழய இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தொடர் ஐபிஎல் கிரிக்கெட்ட். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்தியாவில்  ஐபிஎல்-2022 போட்டி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

குரூப் A, குரூப் B  என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலைய்ல், குரூப் ஏவில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா ரைடர்ச்,  ராஜஸ்தான் ராயல், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளது.

குரூப்  B-ல், சென்னை கிங்ஸ், சன்ரைசர் ஹைதராபாத், ராயல்சேலஞ்சர்ஸ்
பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்  என ஐந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.


இந்தியாவில் கொரொனா பரவல் குறைந்துள்ள நிலையில், இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்