T20 கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு முதலிடம்

திங்கள், 24 அக்டோபர் 2011 (18:17 IST)
ஐ.சி.சி. புதிதாக அறிமுகம் செய்துள்ள T20 கிரிக்கெட் தரவரிசையில் T20 கிரிக்க்ட் நடப்பு சாம்பியன்களான இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது, நியூஸீலாந்து 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும், ஆஸ்ட்ரேலியா 6வது இடத்திலும், பாகிஸ்தான் 7வது இடத்திலும் உள்ளன.

இந்த அணிகளைத் தொடர்ந்து வெஸ்ட் இண்ட்டிஸ், ஆகானிஸ்தான், ஜிம்பாப்வே உள்ளது. வங்கதேசம் இன்னும் போதுமான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாடவில்லை என்பதால் தரவரிசைப் பட்டியலில் பின்னல் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

பேட்டிங்கில் இங்கிலாந்து அடிரடி மன்னன் இயான் மோர்கன் முதலிடத்திலும் பந்து வீச்சில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்ட்ரேலியாவின் ஷேன் வாட்சன் நம்பர் 1 ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இங்கிலாந்து 20 T20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது இதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 24 போட்டிகளில் பங்கேற்று பாதியைத் தோற்றுள்ளது.

பேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் பிரெண்டன் மெக்கல்லமும், 3வது இடத்தில் கெவின் பீட்டர்சனும் உள்ளனர். பந்து வீச்சில் முதல் 7 இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் உள்ளது.

ஆல்ரவுண்டரில் இரண்டாவது இடம் அஃப்ரீடிக்குச் சென்றுள்ளது. அடுத்ததாக டேவிட் ஹஸ்ஸி, மொகமட் ஹபீஸ் உள்ளனர். அப்துல் ரசாக்கும் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இடம்பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்