6-வது போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி

வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (11:34 IST)
webdunia photo
FILE
இளம் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் எடுத்த 111 ரன்களாலும், பின்பு ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அடுத்தடுத்து செய்த இரண்டு அபார ரன் அவுட்களாலும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து அணியை டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற 6-வது ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 6- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

டிம் பெய்ன் எடுத்த 111 ரனகளாலும், மைக் ஹஸ்ஸி (65), ஜேம்ஸ் ஹோப்ஸ் (38), கேமரூன் ஒயிட் (35) ஆகியோரது அதிரடி ஆட்டங்களாலும் ஆஸ்ட்ரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது.

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்வான், மஸ்காரென் ஹாஸ் போன்றவர்களும் சிக்கனமாக வீசி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பெய்னும், ஹஸ்ஸியும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 163 ரன்களைச் சேர்த்தது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவின் இந்த விக்கெட்டுகளுக்கு இடையேயான சாதனையாகும்.

இங்கிலாந்து துரத்தல் இழப்புடந்தான் துவங்கியது. ஷேன் வார்னால் நல்ல நடுவர் என்று புகழப்பட்ட ஆசாத் ரஃப் என்ற பாகிஸ்தான் நடுவர் பிரட் லீ வீசிய முதல் ஓவர் பவுன்சர் ஸ்ட்ராசின் தோள்பட்டையில் பட்டு கேட்சாக சென்றதை கவனிக்காமல் அவுட் கொடுக்கிறார்.

அதன் பிறகு ஃபீல்டிங் பவர் பிளேயின் போது ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து வீரர்களான பொபாரா, மேட் பிரையர் இருவரையும் ரன் அவுட் செய்கிறார். இதிலிருந்து இங்கிலாந்து அணி மீள முடியாமல் தொடர்ச்சியான 6-வது தோல்வியைச் சந்தித்தது.

இங்கிலாந்து அணியின் 517 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 11-வது மிகப்பெர்யிஅ தோவியை இங்கிலாந்து சந்தித்துள்ளது. மேலும் கடந்த 8 ஆண்டுகளில் இது ஒரு மிகப்பெரிய உள்ளூர் தோல்வியாக முடிந்துள்ளது.

இதற்கு முன்னால் எந்த வித சவாலும் இல்லாமல் மிக இழிவான முறையில் தோல்வி அடைந்தது இலங்கைக்கு எதிராக. 321 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. ஆனால் ஜெயசூரியா கொடுத்த விளாசலில் ஆட்டத்தை இலங்கை 38-வது ஓவரில் வெற்றி பெற்றது. இதுவும் ஒரு மிகப்பெரிய தோல்வி.

ஆட்ட நாயகனாக டிம் பெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்