2 ஆவது டெஸ்ட்: இந்தியா - இலங்கை பலப்பரிட்சை

வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (09:24 IST)
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்புவில்  நடைபெறவுள்ளது.
 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையிடம் வீழ்ந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
கடந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் அசத்தலாக ஆடிய இந்திய அணி 2 ஆவது இன்னிங்சில் அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சியால் படுதோல்வியை சந்தித்தது. எனவே இதற்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் பல வியூகங்களை கையாளவுள்ளனர். எனினும் இலங்கை அணியில் சண்டிமால் நிலைத்து நின்று ஆடிவிட்டால் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். 
 
எனவே இந்திய பந்துவீச்சாளர்கள் சாதூர்யமாக செயல்பட வேண்டும். தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பாதகமான விஷயம் ஆகும். எனினும் ஸ்டூவர்ட் பின்னியின் வருகையால் இந்திய அணி பலமாக காணப்படுகிறது.
 
இந்திய அணியில் கோலி, ரகானே, அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகிய வீரர்கள் இலங்கை அணிக்கு சவால்விடுக்க காத்துகொண்டிருக்கின்றனர். இலங்கையை எடுத்துகொண்டால் மேத்யூஸ், திரிமானே, சண்டிமால், கவுசல் ஆகியோரும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடியை தரக்கூடியவர்கள். இலங்கையின் நட்சத்திர வீரர் சங்ககரா இப்போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்