உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசுத்தொகை ரூ.60 கோடி

செவ்வாய், 11 நவம்பர் 2014 (14:36 IST)
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் 2015 ஆம் ஆண்டுக்கான  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பிப் 14, 2015 அன்
று தொடங்கி மார்ச் 29, 2015 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிகள் குறித்து சில ஆலோசனைகளை ஐசிசி மேற்கொண்டது.
 
இதில் உலகக்கோப்பையின் நாக்அவுட் சுற்றில் சூப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கால்இறுதி அல்லது அரை இறுதி ஆட்டம் டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படட மாட்டாது. 
 
இப்போட்டிகளில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இப்போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.60 கோடியாகும். உலகக்கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும். இதில் 2 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 1/2 கோடி பரிசாக கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்