1st ODI : இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

சனி, 28 ஜனவரி 2023 (18:45 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 299 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ALSO READ: T-20 போட்டி: நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இதையடுத்து பேட்டிங் செய்த, இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து  தோற்றது.

எனவே, தென்னாப்பிரிக்க அணி 27 ரன்கள் வெற்றி பெற்றது.  அன்ரிச் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்