135 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்

வெள்ளி, 9 டிசம்பர் 2011 (15:07 IST)
சிட்டகாங்கில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று வங்கதேசம் முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்குச் சுருண்டது.

8ஆம் நிலையில் களமிறங்கும் நசீர் ஹுசைன் 41 ரன்கள் எடுத்தார். துவக்க வீரர் நசிமுதீன் 31 ரன்கள் எடுத்தார்.

ஷாரியார் நபீஸ், அஷ்ரபுல், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹஸன் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், ஐஜாஜ் சீமா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சயீத் அஜ்மல், அப்துர் ரெஹ்மான் ஆகிய ஸ்பின்னர்கள் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து விளையாடி வரும் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்