ஹைதராபாத் லெவன் அணி படுதோல்வி

புதன், 12 அக்டோபர் 2011 (12:18 IST)
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஹைதராபாத் லெவன் அணி 114 ரன்களுக்குச் சுருண்டு படு தோல்வியடைந்தது.

இங்கிலாந்து 367 ரன்கள் சேர்க்க தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் லெவன் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

68 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஹைதராபாத் அதன் பிறகு 46 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறி கொடுத்து பரிதாபத் தோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் இங்கிலாந்து இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று 14ஆம் தேதி ஒரு நாள் போட்டிக்கு தயாராக்கிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்