ஷாரூக்கான் அதிருப்தி; இந்தியா திரும்பினார்

புதன், 29 ஏப்ரல் 2009 (12:30 IST)
மும்பை: ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாரூக் கான் தங்களது அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினால்தான் தென் ஆப்பிரிகாவிற்கு தான் மீண்டும் செல்வதாகக் கூறி இந்தியா திரும்பினார்.

மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக் கான் "அணி வீரர்கள் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, இந்த அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், இன்னமும் கடின உழைப்பு தேவைப்படுகிறது." என்றார்.

வரும் 30ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்துள்ள ஷாரூக்கான் தனது அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருபினால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா செல்வேன் என்று கூறியுள்ளார்.

தற்போதைய அணித் தலைவர் பிரண்டன் மெக்கல்லம் திறமையான கேப்டந்தான் என்று கூறிய ஷாரூக்கான் அவர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றார். மேலும் சௌரவ் கங்கூலியையும் பெயருக்கு பாராட்டிய ஷாரூக்கான் ஒரு அணியாக திரண்டு விளையாடினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்றார்.

தனது புதிய ஹிந்தி படங்களை விற்பதற்காக அனைத்து வித மார்க்கெட்டிங் விற்பனை உத்திகளையும் கடைபிடித்து வருபவர் ஷாரூக் கான். தனது அணியையும் தனக்டு இந்தத் திறமையால் விளம்பரப்படுத்தினார். இருப்பினும் தோல்வி மேல் தோல்விதான் எஞ்சியுள்ளது.

பாலிவுட்டில் பரபரப்படைய ஏதாவது செய்து அன்றைய தின செய்தியின் நாயகனாக விளங்கலாம், ஆனால் இது கிரிக்கெட் ஆயிற்றே, இதில் இது போன்ற ஸ்டன்ட்களினால் அணி வெற்றி பெற்று விடுமா என்ன?

வெப்துனியாவைப் படிக்கவும்