வெற்றிக்கு 33 ஓவர்களில் 137 தேவை!

வியாழன், 12 ஜூலை 2012 (15:20 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற இன்னும் 33 ஓவர்களில் 137 ரன்கள் தேவை. தற்போது இலங்கை 133/2 என்று உள்ளது.

சங்கக்காரா 35 ரன்களுடனும், மகேலா 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக துவக்க வீரர் பரனவிதனா, 22 ரன்களில் ஜுனைத் கானிடம் வீழ்ந்தார்.

அபாரமாக விளையாடி 8 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசிய மற்றொரு துவக்க வீரர் சந்திமால் அஜ்மல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக பாகிஸ்தான் தன் இரண்டாவது இன்னிங்சை 380/8 என்று டிக்ளேர் செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்