வாரியத் தலைவர் அணிக்கு எதிரான ஆட்டம்: ஆஸி.-145/4

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:42 IST)
ஹைதராபாத்தில் நட‌ந்து வரு‌ம் இந்தியா வாரியத் தலைவர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்று துவங்கிய இப்போட்டியில் பூவா, தலையா வென்ற யுவராஜ் சிங் தலைமையிலான வாரியத் தலைவர் அணி முதலில் பேட் செய்தது. நேற்றைய ஆட்டம் முடிவில் 371 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்றைய 2ம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வாரியத் தலைவர் அணி முதல் இன்னிங்சில் 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஹைடன் 20 ரன்களும், சைமன் கேடிச் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங் 41 ரன்னில், பியூஷ் சாவ்லா பந்தில் போல்ட் ஆனார். பின்னர் ஆடிய மைக்கேல் கிளார்க் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்ததால் ஆஸ்ட்ரேலிய அணி 128 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இன்னிங்சின் 48வது ஓவரில் மைக் ஹஸி 33 ரன்களுடனும், ஹட்டின் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், பத்தான், ஓஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்