வாட்சன், ஹியூஸ் அவுட்; ஆஸி. 22/2

புதன், 9 நவம்பர் 2011 (16:43 IST)
கேப்டவுனில் நடைபெற்று வரும் ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து வருகிறது. அந்த அணி துவக்க வீரர்களை இழந்து 22 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துகள் நன்றாக எழும்பி ஸ்விங் ஆகும் ஆட்டக்களத்தில் டேல் ஸ்ட்யென் பந்தை கடுமையாக ஸ்விங் செய்தார். இதில் ஷேன் வாட்சன் 3 ரன்கள் எடுத்த நிலையில் காலிஸிடம் கேட்ச் கொடுத்து முதலில் வெளியேறினார்.

பந்து லெக் ஸ்டம்ப் லைனில் வந்து ஆடியேயாக வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்த வாட்சன் பந்து மட்டையின் விளிம்பைத் தொட்டு ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனது.

புது முக பந்து வீச்சாளர் ஃபிலாண்டர் அதே போன்ற ஒரு பந்தை இடது கை வீரரான ஹியுஸிற்கு வீச அவர் அதன ஒன்றும் செய்ய முடியாமல் பவுச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிக்கி பாண்டிங் வந்து இறங்கியவுடனேயே பிலாண்டர் வீசிய ஷாட் பிட்ச் பவுன்சரை அபாரமாக ஹுக் செய்து ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்தார். பாண்டிங் 6 ரன்களுடனும் ஷான் மார்ஷ் 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்