வலைப்பயிற்சியில் பாண்டிங் தீவிரம்

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (11:12 IST)
உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு பயிற்சியைத் தொடங்கியுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாண்டிங், கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

இப்போது அவரது கைவிரல் ஓரளவு குணமடைந்துள்ளதால் உலகக் கோப்பைக்கு இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

புதன்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்ட பாண்டிங், எடை குறைந்த பந்துகள், பிளாஸ்டிக் பந்துகளை பயன்படுத்தியே பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் உடன் இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்