ரோஹித் ஷர்மாவை தேர்வு செய்திருக்கவேண்டும் - பேடி

புதன், 9 பிப்ரவரி 2011 (15:33 IST)
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருப்பது தேவையற்றது, மாறாக ரோஹித் ஷர்மாவை அணியில் தேர்வு செய்திருக்கவேண்டும் என்று முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிஷன் சிங் பேடி இந்திய அணியின் வாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் இவ்வாறு கூறினார்.

"நம் அணியில் ஒரு ஸ்பின்னர் கூடுதாலாக இருக்கிறார். 2 ஸ்பின்னர்கள் போதுமானது என்று நினைக்கிறேன், மாறாக ரோஹித் ஷர்மாவை அணியில் தேர்வு செய்திருக்கவேண்டும்" என்றார் பிஷன் சிங் பேடி.

அதே போல் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதில் மிகப்பெரிய இடைஞ்சல் மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு என்றார். இந்த எதிர்பார்ப்பு சச்சின் டெண்டுல்கரையும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஆனால் அவர் 21 ஆண்டுகளாக தற்போது விளையாடி வருகிறார் அதனால் இந்த நெருக்கடிக்கு அவர் ஆளாக வாய்ப்பில்லை என்றார் பேடி.

அதே போல் பிரவீண் குமாரின் இழப்பு ஒன்றும் எதிர்மறையான விவகாரம் அல்ல. அவர் மேட்ச் அனுபவம் இல்லாமல் நேரடியாக உலகக் கோப்பையில் களமிறங்குவதை விட சமீபமாக சர்வதேச போட்டிகளில் விளையாடிய் வீச்சாளர் அணியில் இடம் பெறுவது நல்லதுதான் என்றார்.

பந்து வீச்சு பலவீனமாக இருப்பதால் பேட்ஸ்மென்கள் இந்திய ஆட்டக்களங்களில் அவர் மனதில் நினைத்திருக்கும் போதுமான ரன் எண்ணிக்கை என்பதைக் காட்டிலும் 50 ரன்கள் அதிகம் எடுக்க வேண்டும் என்று கூறினார் பேடி.

1983ஆம் ஆண்டு வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் தற்போதைய அணிக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அவர் கூறுகையில் அந்த அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்த அணி இழப்பதற்கான உரிமைகள் இல்லாதது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்