ரீடிஃப் ‌மீது ‌‌பி.‌சி.‌சி.ஐ. வழ‌க்கு!

புதன், 28 மே 2008 (16:24 IST)
ரீடிஃப் இணையதள நிறுவனத்தின் இந்தியன் ஃபேன்டசி லீக்.காம் என்ற ஆன் லைன் கிரிக்கெட் விளையாட்டின் வணிக முத்திரை மற்றும் அடையாளம் இந்தியன் பிரிமியர் லீக் முத்திரைகளை ஒத்திருப்பதால் அந்த டொமைன் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்திலபி.சி.சி.ஐ. மனு செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரீடிஃப் இணையதளத்திற்கும் அதன் உரிமையாளர் சந்தீப் கோயலிற்கும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

மேலும் இந்த வழக்கை மேல் விசாரணைகளுக்காக ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சத்திய நாராயணன்.

இந்தப் பெயரில் நடத்திய ஆன் லைன் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஈட்டிய வருவாய் பற்றிய உண்மை விவரங்களை கோயால் வெளியிவேண்டும் என்ற கோரிக்கையையும் பி.சி.சி.ஐ. வைத்துள்ளதோடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் கோரியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்