முதல் ஓவரில் கெய்ல் அவுட் - 22/1 (5)

வியாழன், 24 பிப்ரவரி 2011 (14:58 IST)
டெல்லியில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜோஹன் போத்தா வீசிய முதல் ஓவரில் மேற்கிந்திய அபாய வீரர் கிறிஸ் கெய்ல் பூஜ்ஜியத்தில் வீழ்ந்தார்.

டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோர் இருக்க, துவக்கத்திலேயே ஆஃப் ஸ்பின்னர் ஜோஹன் போத்தாவை பந்து வீச அழைத்து ஸ்மித் அதிர்ச்சியளித்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கிறிஸ் கெய்ல் 3-வது பந்தில் சற்றே வெளியே சென்ற பந்தை ஆட முயன்று பந்து மட்டை விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் இதற்காகவே நிறுத்தப்பட்டிருந்த காலிஸ் கையில் கேட்சானது.

ஆனால் அதன் பிறகு இளம் ஈரர் டேரன் பிராவோ, ஆட்டம் பார்க்க லாராவின் ஆட்டத்தைப் போல் உள்ள வீரரான இவர் டேல் ஸ்டெய்ன் பந்தில் 3 அற்புதமான பவுண்டரிகளை அடித்தார்.

மற்றொரு வீரர் டிவைன் ஸ்மித் போத்தாவின் பந்தை ஒரு பவுண்டரி அடித்தார்.

டேரன் பிராவோ 16 ரன்களுடனும், டெவன் ஸ்மித் 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்