புனேவை ‌வீ‌ழ்‌த்‌தி ராஜஸ்தான் ஹா‌ட்‌ரி‌க் வெ‌ற்‌றி

திங்கள், 2 மே 2011 (10:02 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியி‌ன் ‌லீ‌க் ஆ‌ட்ட‌த்த‌ி‌ல் புனே வாரியர்ஸ் அணியை‌ 6 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அ‌ணி தொட‌ர்‌ந்து ஹா‌ட்‌ரி‌க் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

ஜெய்பூரில் நே‌ற்‌று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக உத்தப்பா 35 ரன்களும், பாண்டே 30 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெய்லர் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவருடன் ரஹானே 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த இணை 5.2 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தது. மெனாரியா 22 ரன்கள் எடுத்தார்.

புனே தரப்பில் ராகுல் ஷர்மா 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 13 ரன்களே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியும் பலன் கிடைக்கவில்லை. டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ராஜஸ்தான் தொடர்ச்சியாக பதிவு செய்த 3வது வெற்றி இதுவாகும். மொத்தத்தில் அந்த அணிக்கு கிடைத்த 5வது வெற்றியாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

ராஜஸ்தானுக்கு உள்ளூர் மைதானமான ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதான‌ம் எப்போதும் ராசியானதாகும். கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 19 ஆட்டங்களில் விளையாடி அதில் 15இல் ராஜஸ்தான் வெற்றி பெற்‌றிரு‌க்‌கிறது.

முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட புனே அணி, தொடர்ச்சியாக சந்தித்த 6வது தோல்வியாகும். இனி வரும் ஒவ்வொரு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பதால் புனே அணி அடுத்த சுற்றே எட்டுவது இனி கடினம் தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்